10வது முறையாக பதவியேற்றுள்ள பீகார் முதல்வருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
புதுச்சேரி, நவ. 21: பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: பீகார் முதல்வராக 10வது முறையாகப் பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான சாதனை, பீகார் மக்கள் உங்கள் தலைமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் பொதுச்சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில் தொடர்ந்து வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது. புதுச்சேரி மக்கள் மற்றும் புதுச்சேரி அரசின் சார்பாக, உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பீகார் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து நீங்கள் ேசவை பணியாற்றிட வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement