அரசு பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 4 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்
உளுந்தூர்பேட்டை, ஆக. 20: உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 4 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 11ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு குடிபோதையில் வந்து ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் பெற்றோரை அழைத்து பேசி எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பள்ளியின் மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 4 மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் நேற்று வழங்கி பள்ளியிலிருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement