ஒருதலை காதல் விவகாரத்தில் வாலிபரை இரும்பு பைப்பால் தாக்கிய பெண்ணின் சகோதரர்
விழுப்புரம், செப். 18: விழுப்புரம் அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் வாலிபரை இரும்பு பைப்பால் தாக்கிய பெண்ணின் சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே பரசுரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ரமணன்(21). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது சகோதரர் ராம்பிரகாஷ் நேற்று ரமணனை வழிமறித்து இரும்பு பைப்பால் சரமரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் வளவனூர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement