திருவெண்ணெய்நல்லூர் அருகே ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்
திருவெண்ணெய்நல்லூர், செப். 17: திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று அதிகாலை காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் அரசூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனைக்காக நிறுத்தியபோது வேகமாக சென்றது. காரை போலீசார் துரத்திச் சென்று இருவேல்பட்டு பகுதியில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது பெங்களூரிலிருந்து சட்ட விரோதமாக விற்பனைக்காக கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 120 கிலோ புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் புகையிலை பொருட்களை கடத்தியவர் புதுவை மாநிலம், பாகூர் நிர்ணயப்பட்டு பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் கதிரவன் (38) என்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் கதிரவனை கைது செய்தனர். கார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.