அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு
மேல்மலையனூர், அக்.11: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா மேல்அருங்குணம் மதுரா புதூர் பூங்குணம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் (80), இவர் நேற்று அதிகாலையில் தனது வயலுக்குச் சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விவசாயி உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
Advertisement