ரூ.95 ஆயிரம் பணம் திருட்டு
செஞ்சி, ஆக.8: செஞ்சியை அடுத்த கல்லாலிப்பட்டு என்ற ஊரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் தனசேகரன் (41), இவர் தனது டிவிஎஸ் ஸ்கூட்டியில் சீட்டுக்கு அடியில் ரூ.95,000 பணத்தை வைத்துவிட்டு செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது ஸ்கூட்டியில் வைத்திருந்த பணம் காணவில்லையாம். இதுகுறித்து அவர் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement