பெண்ணை இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை, அக். 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மனைவி கலையரசி (40). சம்பவத்தன்று இவருடைய 17 வயது மகள் தனது வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றபோது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராம்குமார் (21) என்பவர் சிறுமியை அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கலையரசி கேட்டதற்கு அவரை ராம்குமார் இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் கலையரசி கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தார்.
Advertisement
Advertisement