அனுமதி இன்றி மது விற்ற வாலிபர் கைது
திருக்கோவிலூர், ஆக. 6: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை கம்பன் நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் அஜித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கனகனந்தல் சாலையில் கம்பன் நகர் வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தததில் சாக்கு பையில் மதுபானம் இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கம்பன் நகரை சேர்ந்த அப்துல் கரீம் மகன் ஹமித் (19) என்பதும், இவர் அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதற்காக காரில் எடுத்து வந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் ஹிமித் மீது வழக்கு பதிந்து கைது செய்து 70 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.