கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மார்பிங் போட்டோ அனுப்பி மிரட்டி ரூ.2.13 லட்சம் மோசடி '
புதுச்சேரி, நவ. 5: கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மார்பிங் போட்டோ அனுப்பி மிரட்டி ரூ.2.13 லட்சம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். புதுச்சேரி முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆண் நபர். அவர், லோன் ஆப் மூலம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை குறிப்பட்ட காலக்கெடுவுக்குள் அவர் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் கூடுதல் வட்டியை கேட்டும், மார்பிங் போட்டோ அனுப்பியும் மிரட்டி ரூ.2.08 லட்சத்தை அபகரித்துள்ளனர். இதேபோல், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபர் லோன் ஆப் மூலம் ரூ.7 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் கடனை குறித்த காலத்தில் திரும்ப செலுத்திய பிறகும், அவருக்கு மார்பிங் போட்டோ அனுப்பி மிரட்டி ரூ15 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளனர். லிங்காரெட்டிபாளையம் ஆண் நபரையும் இதுபோல் மிரட்டி ரூ.62 ஆயிரத்தை மோசடி ெசய்துள்ளனர். லாஸ்பேட்டையை சேர்ந்த பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.734க்கு பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். பொருட்களை பெறும்போது, முகவரி அப்டேட் எனக்கூறி ரூ.5 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து விட்டனர். இது குறித்து புகார்களின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.