லோன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
விருத்தாசலம், ஆக. 5: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் சஞ்சீவி ராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(49). இவரது மனைவி சாந்தி(30). பினாயில் விற்பனை கூலித்தொழில் செய்து வருகின்றனர். சாந்தி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரைச்செல்வி என்பவர் சாந்தியிடம் லோன் வாங்கி தருவதாக கொஞ்சம் கொஞ்சமாக ரூ.2 லட்சம் பணமும், ஒரு பவுன் தங்கமும் வாங்கியுள்ளார். இதில் 14 மாதங்கள் ஆன நிலையில் லோன் எதுவும் அவர் வாங்கித் தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை தனது கணவர் சீனிவாசன் மூலம் செந்தாமரை செல்வியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தைத் திரும்ப தர மறுத்ததுடன் அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சீனிவாசன் பெண்ணாடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், செந்தாமரைச்செல்வி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.