அன்புமணி இடத்தில் காந்திமதி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே பட்டானூரில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தான் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் பரசுராமனை ராமதாஸ் அறிவித்தார். அப்போது ராமதாசுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அன்புமணி மேடையிலே ைமக்கை தூக்கிபோட்டு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு தான் பாமக இரண்டாக பிளவு பட்டது. கட்சி பிளவு பட்ட இடத்திலிருந்தே அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ராமதாஸ் அன்புமணி அமர்ந்திருந்த அதே இடத்தில் தனது மூத்த மகளும் முகுந்தனின் தாயுமான காந்திமதியை அமரவைத்திருந்தார்.