சிஎஸ்ஐ கன்னியாகுமரி மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரி பொறுப்பேற்பு
நாகர்கோவில், ஜூலை 11: சிஎஸ்ஐ கன்னியாகுமரி மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரியாக டாக்டர் ராய்ஸ் மனோஜ் விக்டர் பொறுப்பேற்றார். கன்னியாகுமரி சிஎஸ்ஐ ஆயராக பணியாற்றி வந்த ஏ.ஆர்.செல்லையா பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி சிஎஸ்ஐ மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரியாக சிஎஸ்ஐ மலபார் ஆயர் டாக்டர் ராய்ஸ் மனோஜ் விக்டர் நியமிக்கப்பட்டார். அவர் சிஎஸ்ஐ கன்னியாகுமரி மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரியாக நாகர்கோவிலில் உள்ள மறை மாவட்ட அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றார். இந்நிகழ்வில், ஆயர் முறைப்படி வரவேற்கப்பட்டு, மறை மாவட்டத்தை வழிநடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.