தீத்தானிப்பட்டியில் கிணற்றுக்குள் விழுந்த மாடு மீட்பு
Advertisement
கறம்பக்குடி, ஜூலை 2: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த தீத்தானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, விவசாயி. இவரது மாடு அப்பகுதி வேளாண் நிலத்தில் மேய்ந்து கொண்டிருக்கும்போது, தவறி அருகிலிருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதுகுறித்து, கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) கருப்பையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Advertisement