₹32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
நாமக்கல், ஆக.21: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், 1335 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலம் நடத்தினர். ஏலத்தில், ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ₹7720 வரையும், சுரபிரகம் ₹8199 வரையும், மட்ட ரகம் ஒரு குவிண்டால் ₹5499 வரையும் ஏலம் போனது. இதில் மொத்தம் ₹32லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
Advertisement
Advertisement