ரூ.11.15 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
பரமத்திவேலூர், ஜூலை 9: பரமத்திவேலூரை அடுத்த வெங்கமேட்டில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்திற்கு, 10 ஆயிரத்து 550 கிலோ கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.74.20க்கும், குறைந்த பட்சமாக ரூ.69.69க்கும், சராசரியாக ரூ.72க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7லட்சத்து 91 ஆயிரத்து 250க்கு ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் 17ஆயிரத்து 119 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.69.99க்கும், குறைந்த பட்சமாக ரூ.52.10க்கும், சராசரியாக ரூ.68.19க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11லட்சத்து 15ஆயிரத்து 119க்கும் கொப்பரை ஏலம் போனது.