குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம்
ஊட்டி, செப்.3: நீலகிரி மாவட்டம், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணை தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். செயலாளர் ஆல்துரை அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு பஸ்களிலும் சாதாரண கட்டணம் நிர்ணயம் செய்து அரசு ஆணை வழங்கியுள்ளது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக பெரும்பாலான பஸ்களில் விரைவு கட்டணம் வசூலித்து வருகிறது.
இதனை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இன்று வரை நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தவில்லை. எனவே 16ம் தேதி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பொதுநல அமைப்புகளை போராட்டத்தில் பங்கேற்க அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தர்மசீலன் நன்றி கூறினார்.