தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: வெப்பம் குறைந்து குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி

 

Advertisement

திருவாரூர், மே 21: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 105 டிகிரி முதல் 115 டிகரி வரையில் கடந்த 2 மாத காலமாக வெயில் சுட்டெரித்து வந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் 105 டிகிரி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இதன் காரணமாக பொது மக்கள், கல்லு£ரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வெயில் காரணமாக மரம், செடி, கொடிகளின் இலைகளும் உதிர்ந்து காய்ந்து போகும் நிலை ஏற்ப்பட்டது.

மேலும் கால்நடைகளுக்கும் மேய்சலுக்கு புல் கிடைக்காமல் தவித்து வந்தன. இந்நிலையில் வெப்ப சலணம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் கடந்த 8ந் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் ஓரளவு வெப்பம் குறைந்ததையடுத்து பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  மேலும் கடநத 10 நாட்களுக்கும் மேலாக விட்டுவிட்டு பெய்து வரும் இந்த தொடர்மழை காரணமாக காய்ந்துபோன மரங்களில் இலை துளிர்த்து வருவதுடன் ஆங்காங்கே புல்வெளிகளும் முளைத்துள்ளதால் இதன் காரணமாக மேய்சலுக்கு இடமின்றி தவித்த கால்நடைகளுக்கும் இந்த மழையானது பயனுள்ளதாக இருப்பது குறிப்பிடதக்கது.

Advertisement