நாகப்பட்டினத்தில் புத்தக கண்காட்சி குறித்த கலந்தாய்வு கூட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 23: நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தக கண்காட்சியை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நாகப்பட்டினம் மாவ ட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடததப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான புத்தக கண்காட்சி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஐடிஐ திடலில் வரும் 1ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புத்தக கண்காட்சியில் அரியவகை நூல்கள், மாணவர்களுக்கு பயன்தரும் புத்தகங்கள், மாநில மற்றும் ஒன்றிய அரசு போட்டி தேர்விற்கு தேவையான குறிப்புதவி நூல்கள் என ஏராளமான புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.வரும் 1ம் தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில், புத்தக கண்காட்சியை தினந்தோறும் சிறப்பாக நடத்துவது, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனையை அதிகரிப்பது ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. டிஆர்ஓ பவணந்தி, ஆர்டிஓ அரங்கநாதன் மற்றும் பலர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.