கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
உத்தமபாளையம், செப். 29: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டி ஆர்சி கிழக்கு தெரு 12 வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் மகன் பிரதீப்(23), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் தனியார் கட்டிடத்தில் வேலைபார்த்தார்.
Advertisement
அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் அழுத்த மின்சார வயர் உரசியது. இதில் பிரதீப்பின் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement