சேவுகம்பட்டி பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம்
பட்டிவீரன்பட்டி, ஜூலை 8: சேவுகம்பட்டி பேரூராட்சியில், புதிய சமுதாய கூடம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, சேவுகம்பட்டி பேரூராட்சி 15வது வார்டு கொன்னம்பட்டியில், அயோத்திதாசர் பண்டிதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டும் பணிகள் பூமி பூஜைகளுடன் தொடங்கின.இந்நிகழ்ச்சிக்கு சேவுகம்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா தங்கராஜன் தலைமை தாங்கி புதிய கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தெய்வ ராணி விஜயன், சேவுகம்பட்டி பேரூர் செயலாளர் தங்கராஜன், செயல் அலுவலர் ரமேஷ்பாபு, இளநிலை பொறியாளர் கருப்பையா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தனபால், பாலமுருகன், ராஜேந்திரன், வார்டு செயலாளர் கோப்பெரும்வழுதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.