பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆண்டிபட்டி, ஜூலை 15: ஆண்டிபட்டி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலைப்பிரிவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி தேனி மாவட்ட துணைச் செயலாளர் அபுதாஹிர் விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.