செய்யாறில் வருவாய் துறை சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
செய்யாறு: செய்யாறில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள சிறப்பு முகாம் வருவாய் துறை மூலமாக போலீசார் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாமை கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் கூட்டாக நேற்று மதியம் ஆய்வு செய்து பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு வருவாய்த்துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டாட்சியர் அலுவலக வளாகம் ஒட்டியுள்ள சிறப்பு முகாம் மையத்தினை ரூ.65 லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்ய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வருவாய் துறை சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் நேற்று மதியம் சுமார் 1.20 மணி அளவில் கூட்டாக ஆய்வு செய்தனர்.
செய்யாறில் கடந்த 2014-2016 வரை சிறப்பு முகாம் செயல்பட்ட நிலையில் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் செய்யாறில் வருவாய் துறை சிறப்பு முகாமை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இப்பணிகளை துரிதபடுத்த ஆய்வு செய்தனர். விசா முடிந்த வெளிநாட்டு கைதிகள், இலங்கை அகதிகள் பாராமரிக்கும் இடமாக செயல்படுத்த ஆய்வு செய்து தற்போதைய நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய் துறை மற்றும் போலீஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது தாசில்தார் அசோக் குமார், டிஎஸ்பி சண்முகவேலன், போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.