வரும் 2ம் தேதி கோவையில் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு
கோவை, செப்.30: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுபான கடைகள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலா துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை கடைகள் வரும் 2ம்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்படும். விதிமுறைகளுக்கு முரணாக அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட பவன்குமார் தெரிவித்துள்ளார்.