தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

``புதுமைப்பெண்’’ - ``தமிழ்புதல்வன்’’ திட்டம்: கோவையில் 1.27 லட்சம் மாணவர்கள் பயன்

கோவை, டிச. 13: கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின்கீழ் 1.27 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என மாவட்ட கலெக்டர் பவன்குமார் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 மாணவிகளின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் நேரடியாக செலுத்தப்படும் ``புதுமைப்பெண்’’ திட்டம் தமிழ்நாடு முதல்வரால் கடந்த 05.09.2022 அன்று துவங்கப்பட்டது.

Advertisement

இதேபோல், அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ``தமிழ் புதல்வன்’’ திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் கடந்த 09.08.2024 அன்று துவக்கிவைத்தார். கோவை மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 70,648 மாணவிகளும், தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் 56,430 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு மாதம்தோறும், அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், கோவை மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு பெரும் உதவிகரமாக இருப்பதால் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு நிகழ்ச்சி வாயிலாக மனம் நிறைந்து நன்றி தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement