யோகா போட்டியில் கோவை மாணவ, மாணவிகள் அசத்தல்
Advertisement
கோவை, ஜூன் 28: தென்னிந்திய அளவிலான யோகா போட்டி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் 6 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றனர். இந்தப்போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தஞ்சாவூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றனர். இரண்டாம் இடத்தை கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் பிடித்தானர்.
மேலும், இந்த போட்டியில் நடைபெற்ற ஒவ்வொரு வயது பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்கள் அந்தமானில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை கோவை ஓசோன் யோக மையத்தின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் பாலகிருஷ்ணன், இண்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் நிறுவனர் ஆறுமுகம் வாழ்த்து தெரிவித்தனர்.
Advertisement