விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
கோவை, நவ.28: தமிழக வேளாண்மை, உழவர்நலத்துறை அமைச்சர் தலைமையில் 87வது வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கான மாநாடு சென்னையில் இன்று நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க அனைத்து வேளாண்மை துறை மற்றும் அதை சார்ந்த துறை தலைமை அலுவலர்கள் செல்ல இருப்பதால், கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறவிருக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement