தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின் கோவை செம்மொழி பூங்கா விரைவில் திறப்பு

கோவை, டிச.1: கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவையில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கப்பட்டன.

Advertisement

இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில், செம்மொழிப் பூங்கா அமைக்க கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த வகையில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்றன. பல்வேறு வசதிகளுடன் உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை, கடந்த 25 ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்பூங்காவில் அமைக்கபட்டுள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகளை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள் நடப்பட்டுள்ளன. மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதோடு, இப்பெயர் பலகைகளில் க்யூ.ஆர் குறியீடு (QR code) மூலம் அவை குறித்த முழு விபரங்களையும் அறிந்து கொள்ளும் தொழில்நுட்ப வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அனுபவ மையக் கட்டடம், 500 நபர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு, மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டுத்திடல், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை‌, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக பிரத்தியேக விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து மகிழ, பல்வேறு இடங்களில் செல்பி பாயிண்ட்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்கால தமிழர்கள் உபயோகப்படுத்திய பொருட்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம், இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாக படிப்பகம், முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரை தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏதுவாக இருக்கும் வகையில் சக்கர நாற்காலிகள் மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வண்டிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் இன்னும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதில் காலதாமதமாகி வருகிறது. அப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

Related News