தூய்மையே சேவை பணி
Advertisement
சிவகங்கை, அக். 4: சிவகங்கை அருகே பையூர் சமூக பாதுகாப்பு துறை கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் இல்லம் மற்றும் அதை சுற்றியுள்ள அரசினர் உறைவிட பள்ளியில் தூய்மையே சேவை பணியினை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தலைமையில் அஞ்சலக, அலுவலர்கள், ஊழியர்கள் பள்ளி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் கூறுகையில்:கடந்த செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை சிவகங்கை அஞ்சலக கோட்டம் சார்பாக பல்வேறு பணிகள் மேற்கொண்டுடோம். அதன் மூலம் அரசின் பல்வேறு திட்டங்களையும் பொதுமக்களுக்கு எடுத்து செல்ல ஏதுவாக அமைந்தது, என்றார்.
Advertisement