மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணி
திருப்பூர், ஜூலை 10: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், முடிவடைந்த பணிகளை திறந்து வைக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணி மற்றும் சாலை தடுப்புகளில் உள்ள குப்பைகள் முற்புதர்கள் உள்ளிட்டவை அகற்றும் பணியானது நேற்று 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் திருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்களை அப்புறப்படுத்தும் பணியிலும் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.