தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், ஓஎம்ஆர், இசிஆர் அக்கரைக்கு மாநகர பேருந்துகள்: அமைச்சர்கள் சிவசங்கர், அன்பரசன் தொடங்கி வைத்தனர்

சென்னை, ஏப். 26: சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்லும் பயணிகள் வசதிக்காக, மாநகர பேருந்துகளை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன்பேரில், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம், ஓஎம்ஆர், இசிஆர் அக்கரைக்கு மாநகர பேருந்துகளை, அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அதன்படி, தடம் எண்.எம்.ஏ.ஏ.1 (சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து முனையம்) 8 பேருந்துகள் 15 நிமிட இடைவெளியில் 84 பயண நடைகள் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் உயிரியல் பூங்கா வழியாக இயக்கப்படுகிறது. தடம் எண்.எம்.ஏ.ஏ.2 (சென்னை விமான நிலையம் - அக்கரை இசிஆர் சாலை) 7 பேருந்துகள் 30 நிமிட இடைவெளியில் 35 பயண நடைகள் பல்லாவரம், 200 அடி ரேடியல் சாலை, ஓஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக இயக்கப்படுகிறது.

Advertisement

இதேபோல், சென்னை விமான நிலையம்- அக்கரை இடையே மாநகர பேருந்து ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பல்லாவரம், பல்லாவரம் மேம்பாலம் வழியாக, கீழ்கட்டளை சந்திப்பு, ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை வழியாக அக்கரை செல்ல இருக்கிறது. இந்த புதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேருந்துகள் இரவு பகல் என்று 24 மணி நேரமும் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, விமான நிலைய இயக்குநர் தீபக், எம்டிசி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

புதிய வழித்தட பேருந்துகள்

ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனியில் இருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நுற்றாண்டு பேருந்து முனையம், தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் மற்றும் அனகாபுத்தூரிலிருந்து - பிராட்வேக்கு புதிய வழித்தட பேருந்துகளை அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தனர். அதன்படி தடம் எண்.66எம் தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர், கொல்லச்சேரி, 400 அடி சாலை, மலையம்பாக்கம்) இயக்கப்படுகிறது. தடம் எண்.18எஸ் ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனி பேருந்து நிலையத்திலிருந்து - கிளாம்பாக்கம் வரை 2 மகளிர் விடியல் பயண பேருந்துகள் (வழி- கக்கன் பாலம், பிருந்தாவன் நகர், வானுவம்பேட்டை, தில்லை கங்கா நகர், மீனம்பாக்கம், தாம்பரம்) இயக்கப்படுகிறது. தடம் எண்.60 அனகாபுத்தூரிலிருந்து பிராட்வே வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் தேனாம்பேட்டை) இயக்கப்படுகிறது.

Advertisement

Related News