டூவீலர் மீது வாகனம் மோதி குழந்தை, தம்பதி படுகாயம்
சிவகாசி, ஜூலை 10: சாத்தூர் அருகே டூவீலர் மீது வாகனம் மோதி 2 வயது குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். சாத்தூர் அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாதவநாதன்(39). இவர் தனது மனைவி ஷோபனா(32), மகள் நித்யாஸ்ரீ(2) ஆகியோருடன் சிவகாசியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு டூவீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மயிலாடுதுறை பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பாண்டீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த வாகனம் மாதவநாதன் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இதில் மாதவநாதன், ஷோபனா, நித்யாஸ்ரீ ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரும் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விபத்துக்கு காரணமான பாண்டீஸ்வரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.