தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்திவரம் - கூடுவாஞ்சேரி கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு

 

Advertisement

கூடுவாஞ்சேரி, மே 26: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் கால்வாய் தூர்வாரும் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீர் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதால் தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு, கே.கே.நகரில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேற்று முன்தினம் மாலை திடீரென வந்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, வார்டு கவுன்சிலர் கலைச்செல்வன், நகராட்சிகளின் செங்கல்பட்டு மாவட்ட மண்டல செயற்பொறியாளர் மனோகரன், நகராட்சி ஆணையாளர் தாமோதரன், சுகாதார அலுவலர் நாகராஜ், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

அப்போது நகராட்சிக்கு உட்பட்ட சிற்பி நகர், காமாட்சி நகர், அருள் நகர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே பெய்த கனமழையின் போது உடைந்த பாலங்களை சீரமைக்க வேண்டும், நகராட்சி முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டும், நகராட்சி முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் பழுது பார்க்க வேண்டும் என நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனாவிடம் மனு அளித்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட தலைமை செயலாளர், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய பொன்மார் ஊராட்சியில் உள்ள போலச்சேரி கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ.3 லட்சம் மதிப்பில் குளம் மேம்பாட்டு பணிகளையும், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குளம் மேம்பாட்டு பணி தொடங்கப்பட்ட காலம், முடிக்கப்பட்ட காலம், பயன்படுத்தப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Advertisement