திண்டுக்கல் பெரியகோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
திண்டுக்கல், ஜூலை 17: திண்டுக்கல் ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் சக்திவேல் துவக்கி வைத்தார். இம்முகாமில் கலந்து கொண்ட பெரியகோட்டை, ம.மூ.கோவிலூர், தாமரைப்பாடி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அனைத்து துறை அதிகாரிகள் மனுக்களை பெற்று கொண்டனர். இதில் ஊராட்சி உதவி இயக்குனர் நாகராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், கண்ணன், கிழக்கு தாசில்தார் மீனா, மேற்கு தாசில்தார் வில்சன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணி, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement