தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது தனியார் வங்கி மேலாளர் சுருண்டு விழுந்து பலி: கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை

பெரம்பூர், செப்.30: போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது தனியார் வங்கி மேலாளர் சுருந்து விழுந்து பலியான நிலையில். கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி முதல் தெருவை சேர்ந்தவர் கரம்சந்த் காமராஜ் (50). இவர், தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது காரில் வேலைக்குச் சென்று விட்டு இரவு 11 மணியளவில் மாதவரம் நெடுஞ்சாலை வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, செம்பியம் போக்குவரத்து காவல் நிலைய எஸ்ஐ வினோத், தலைமை காவலர் சுதாகர், காவலர் கார்த்திக் உள்ளிட்டோர் கரம்சந்த் காமராஜின் காரை நிறுத்தி குடிபோதை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் மது போதையில் கார் ஓட்டியது போன்று போலீசார் வைத்திருந்த கருவியில் காண்பித்தது.

Advertisement

கரம்சந்த் காமராஜ் தான் மது குடிக்கவில்லை, என போலீசாரிடம் தெரிவித்தார். இதனால், போக்குவரத்து போலீசாருக்கும், கரம்சந்த் காமராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென கரம்சந்த் காமராஜ் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து போலீசார் கரம்சந்த் காமராஜின் மகன் குரு சரண்ராஜ் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்சுக்கு தகவல தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துக் குழு பரிசோதனை செய்து கரம்சந்த் காமராஜ் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

அதற்குள் அவரது மகன் குரு சரண்ராஜ் என்பவரும் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு காண்பித்த போதும் மருத்துவர்கள் அவர் உயர்ந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து, செம்பியம் காவல் நிலைய போலீசார் கரம்சந்த் காமராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து போலீசார் தாக்கியதால் தான் தனது தந்தை இறந்ததாக குரு சரண்ராஜ் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் முத்துக்குமார் விசாரணை நடத்தியதில் கடந்த நான்கு வருடங்களாக இதய பிரச்சினை காரணமாக உயிரிழந்த கரம்சந்த் காமராஜ் மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும் போக்குவரத்து போலீசார் பிடித்தபோது அவர் கோபப்பட்டு பதட்டமடைந்து பேசியதில் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. ஆனாலும், போக்குவரத்து போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி புழல் கோட்டாட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News