தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் 2,995 சாலைகளில் 480 கி.மீ நீள சாலை வெட்டு சீரமைப்பு பணிகள் நிறைவு: மாநகராட்சி தகவல்

சென்னை, ஆக.30: சென்னையில் 2,995 சாலைகளில் 480 கி.மீ நீளத்திற்கு சாலை வெட்டு சீரமைக்கும் பணிகளை நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் சாலை அமைத்தல், பாலம் கட்டுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 418.56 கி.மீ. நீளம் கொண்ட 488 பேருந்து சாலைகள் மற்றும் 5653.89 கி.மீ. நீளம் கொண்ட 35,978 உட்புறச் சாலைகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ.489.22 கோடி மதிப்பீட்டில் 648.75 கி.மீ நீளத்திற்கு 3,987 எண்ணிக்கையிலான சாலைகள் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. கடந்த 2025-26ம் ஆண்டில் 79 பேருந்து சாலைகள் 3908 உட்புறச் சாலைகள் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி மதிப்பீட்டிலும், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.63.22 கோடி மதிப்பீட்டிலும், சிறப்பு திட்ட பணியின் கீழ் ரூ.180 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.96 கோடி மதிப்பீட்டிலும் என 79 பேருந்து சாலைகள் 3908 உட்புறச்சாலை பணிகள் என மொத்தம் 3987 சாலை பணிகள் ரூ.489.22 கோடி மதிப்பீட்டில் ஒப்பம் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் இதுவரை 1,951 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதர சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளை வருகின்ற செப்டம்பர் 15க்குள் முடித்திட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் சாலைகளில் மக்களின் சேவைக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்குதல், பாதாளச் சாக்கடை இணைப்பு ஆகிய பணிகளுக்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் சாலைகளில் மின் கேபிள்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சாலை வெட்டுக்கள் மேற்கொள்ள உரிய வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி, சேவை துறைகளுக்கு ஒப்புதல் அளித்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகள் யாவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்காணிப்பில் ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்யப்பட்டு சாலை வெட்டுப் பணிகள் துரிதமாக செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன்படி, நடப்பாண்டில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு மக்களின் சேவைக்காக 4,982 சாலைகளில் 859.98 கி.மீ. நீளத்திற்கு சாலை வெட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 3266 சாலைகளில் 507.79 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிவுற்று சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ள தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது.

இதில் சென்னை மாநகராட்சியின் மூலம் 2,976 சாலைகள் 476.89 கி.மீ. நீளத்திற்கு சாலை வெட்டு சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதர இடங்களில் சாலைவெட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு 30 சாலைகள் 4.72 கி.மீ நீளத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, சாலை வெட்டு சீரமைக்கும் பணி மேற்கொள்ள தடையில்லா சான்று பெற்று சென்னை மாநகராட்சியின் மூலம் 19 சாலைகள் 2.52 கிமீ நீளத்திற்கு சாலைவெட்டு சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இருசேவை துறைகளின் மூலம் 2995 சாலைகளில் 479.41 கீ.மீ. நீளத்திற்கு சாலை வெட்டு சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement