தீபாவளியின்போது பட்டாசு வெடித்த 81 பேருக்கு பார்வை இழப்பு
சென்னை, அக்.29: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 81 பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2023, 24ம் ஆண்டுகளை காட்டிலும், இந்தாண்டு உடல், கை, கால்கள், கண்பார்வை பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 2023, 2024, 2025ம் ஆண்டுகளில் பட்டாசு வெடித்தபோது மாவட்டம் வாரியாக ஆண், பெண் மற்றும் குழந்தைகள் காயமடைந்து, கண் பார்வை பாதிக்கப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனை குழுமங்களில் சிகிச்சை பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் 397 பேரும், 2024ம் ஆண்டில் 439 பேரும் காயமடைந்துள்ளனர். 2025ம் ஆண்டில் சென்னை - 65, மதுரை - 138, கோயம்பத்தூர் - 121, திருநெல்வேலி - 59, புதுச்சேரி - 114, திருப்பதி - 32, சேலம் -86, தஞ்சாவூர் - 6, திண்டுக்கல் - 21, தேனி - 77, திருப்பூர் - 30, தூத்துக்குடி - 15, உடுமலைப்பேட்டை - 12, கோவில்பட்டி - 0 என மொத்தம் - 776 பேர் காயமடைந்துள்ளனர்.
குழந்தைகளின் பாதிப்பு விவரம்: 2023ம் ஆண்டில் 172 பேரும், 2024ம் ஆண்டில் 174 பேரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் சென்னை - 35, மதுரை - 21, கோயம்பத்தூர் - 68, திருநெல்வேலி 32, புதுச்சேரி - 60, திருப்பதி - 22, சேலம் - 37, தஞ்சாவூர் - 3, திண்டுக்கல் - 12, தேனி - 23, திருப்பூர் - 12, தூத்துக்குடி - 12, உடுமலைப்பேட்டை - 7, கோவில்பட்டி - 0 என மொத்தம் - 344 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பட்டாசு வெடி விபத்தில் கண் பார்வை முழுவதும் இழந்து பாதிக்கப்பட்டவர்கள் விவரம்: 2023ம் ஆண்டில் 45 பேருக்கும், 2024ம் ஆண்டில் 49 பேருக்கும் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் சென்னை - 6, மதுரை - 29, கோயம்பத்தூர் 17, திருநெல்வேலி - 7, புதுச்சேரி - 11, தஞ்சாவூர் - 3, திண்டுக்கல் - 3, திருப்பூர் - 2, உடுமலைப்பேட்டை - 2, தேனி - 1, திருப்பதி, சேலம், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் 0 என மொத்தம் 81 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததால் 81 பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2023, 24ம் ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு கண்பார்வை இழப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.