சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கூடுதல் நுழைவாயில் திறப்பு
சென்னை, அக்.28: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக தாதண்டர் நகர் நோக்கிச் செல்லும் வகையில் கூடுதலாக ஒரு நுழைவாயிலை நேற்று திறந்துள்ளது. இந்த வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணிகளில் ஒருவரான தில்ஷத் பானு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்யா, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் சதீஷ் பிரபு, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement