தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், ஆவடியில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

அண்ணாநகர், அக்.24: நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் 4 பிரபல தனியார் பள்ளிகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில், மின்னஞ்சல் மூலம் மேற்கண்ட பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவல்படி, நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் 2 குழுவினர் தனித்தனியாக சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் அது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பெரும்பாலான பெற்றோர் நேற்று தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்று தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

* ஆவடி பரித்திப்பட்டு வேலம்மாள் பள்ளி, செவ்வாய்ப்பேட்டை வேலம்மாள் பள்ளி மற்றும் திருமழிசை சென்னை பப்ளிக் ஸ்கூல், ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த தனியார் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், 3 பள்ளிகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று முன்தினம் இரவு ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அறிந்த காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் தங்கமணி தலைமையிலான குழுவினர் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தனித்தனிக் குழுவாக விரைந்தனர். பள்ளி வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் தேடுதல் வேட்டையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. மேலும், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement