மின்சார ரயிலில் தனியாக சென்ற 3 குழந்தைகள் மீட்பு
ஆலந்தூர், ஆக.19: தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் நேற்று காலை புறப்பட்டது. பழவந்தாங்கல் ரயில் நிலையம் வந்தபோது ரோந்து பணியில் இருந்த பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கையில் அமர்ந்து இருப்பதைக் கண்டனர். விசாரித்த போது குழந்தைகள் தங்களது பெயர்களை மட்டும் கூறினர். பெற்றோரை பற்றி ஏதும் கூறவில்லை. பயணிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் குழந்தைகளை பற்றி எதுவும் தெரியாது என்றனர். இதையடுத்து, போலீசார் 3 குழந்தைகளையும் பரங்கிமலை ரயில்வே காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பிறகு வழக்கு பதிவு செய்து குழந்தைகளின் பெற்றோர் விவரம் தெரியும் வரை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த 3 தினங்களுக்கு முன் சானடோரியம் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் ஆண் குழந்தையை இறக்கிவிட்டு சென்ற நிலையில், தற்போது 3 குழந்தைகள் ரயிலில் தனியாக பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது