கேரளாவிற்கு கடத்த முயன்ற 60 மாடுகள் பறிமுதல்
பல்லாவரம், செப்.17: மாங்காடு அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் சரக்கு லாரி ஒன்றில் சட்டவிரோதமாக கேரளாவிற்கு மாடுகள் கடத்திச் செல்வதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து சென்ற போலீசார் மாடு கடத்தி வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒரே லாரியில் 60க்கும் மேற்பட்ட மாடுகள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் கொண்டு வரப்பட்டதும், லாரியில் மாடுகள் நிரம்பி வழிந்ததால், அவைகள் தூங்காமல் இருப்பதற்காக அவற்றின் கண்களில் பச்சை மிளகாய் வைத்து தேய்த்து கொடுமைப்படுத்தி கொண்டு வரப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த மாடுகளை லாரியுடன் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement
Advertisement