தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
புழல்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் பொன்னேரியில் 8 செமீ, சோழவரத்தில் 6 செமீ, செங்குன்றத்தில் 4 செமீ மழையளவு பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, புழல் ஏரிக்கு இன்று 417 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2964 மில்லியன் கனஅடியாக நீர்இருப்பு உள்ளது.
புழல் ஏரியின் 21.2 அடி உயரத்தில், தற்போது 19.76 அடி உயரத்துக்கு நீர் நிரம்பி அழகுற காட்சியளிக்கிறது.
இதேபோல் 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 175 மில்லியன் கனஅடியாக நீர்இருப்பு உள்ளது. சோழவரம் ஏரிக்கு இன்று 44 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 18.86 அடி உயரமான சோழவரம் ஏரியில், தற்போது 4.37 அடி உயரத்துக்கு நீர்இருப்பு அதிகரித்துள்ளது. இவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.