உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 வார்டுகளில் இன்று நடக்கிறது
சென்னை, ஆக.12: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-47ல் கொருக்குப்பேட்டை, ஏ.இ.எம்.பள்ளி மைதானம், ராயபுரம் மண்டலம், வார்டு-56ல் பிரகாசம் சாலையில் உள்ள ஹையாத் மஹால், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-67ல் திரு.வி.க. நகர் காமராஜர் திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-100ல் டி.பி.சத்திரம் பிரதான சாலையில் அண்ணா சமுதாயக்கூடம், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136ல் சாலிகிராமம், 80அடி சாலையில் உள்ள சமுதாயக்கூடம், பெருங்குடி மண்டலம், வார்டு-186ல் புழுதிவாக்கம் பிரதான சாலை, சுமங்கலி திருமண மண்டபம் ஆகிய 6 வார்டுகளில் இன்று நடக்கிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம், என மாநகராட்சி தெரிவித்துள்ளது.