சென்னை பையனூரில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மருத்துவ உதவியாளர் தினம் கடைபிடிப்பு
சென்னை, அக்.10: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மேரி வர்கீஸ் (65). இவர், தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர் மாதவரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கொளத்தூர் பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2,605 சதுர அடி காலி நிலம் உள்ளது. இதை சிலர் அபகரித்ததாக மேரி வர்கீஸ் அளித்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொளத்தூரில் தியேட்டர் நடத்தி வரும் சீனிவாசன் (64) மற்றும் ஸ்டீல் கடை நடத்தி வரும் இளஞ்செழியன் ஆகியோர் திட்டமிட்டு போலியான ஆணங்கள் மூலம் அபகரித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தியேட்டர் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் ஸ்டீல் கடை உரிமையாளர் இளஞ்செயழியனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரேமாவை தேடி வருகின்றனர்.