சாலை தடுப்பு சுவரில் மாநகர பேருந்து மோதல்
பெரம்பூர், செப்.9: திருவிக நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தடம் எண்:170 தாழ்த்தள மின் பேருந்து நேற்று காலை 6 மணியளவில் பயணிகளுடன் கிண்டி புறப்பட்டு சென்றது. பேருந்தை முருகன்(47) என்பவர் ஓட்டி வந்தார். கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு மூகாம்பிகை சிக்னல் அருகே சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து அலறிக் கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து போலீசார் மீட்பு வாகனம் உதவியுடன் சுமார் ஒருமணி நேரம் போராடி சாலை தடுப்பில் சிக்கிய மின் பேருந்தை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement