தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காதலை கைவிட முயன்ற தகராறில் நடுரோட்டில் ஓடஓட விரட்டி காதலனை தாக்கிய மாணவி

சென்னை, ஆக.9: காதலை கைவிட முயன்ற தகராறில், தனது காதலனை நடுரோட்டில் ஓடஓட விரட்டி கட்டையால் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் தாக்கிய சம்பவம் கே.கே.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அசோக்நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (21), கார்பெண்டர். இவர் நெசப்பாக்கத்தை சேர்ந்த 21 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவியை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ‘‘உனக்கும் எனக்கும் செட் ஆகாது. இந்த காதலை நாம் தொடர வேண்டாம்,’’ எனக்கூறிய சட்டக்கல்லூரி மாணவி, கார்த்திகேயனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டக்கல்லூரி மாணவி தனது தாய், தங்கையுடன் கே.கே.நகரில் உள்ள கோயிலுக்கு வந்துள்ளார். இதை அறிந்த கார்த்திகேயன், தனது காதலியை சமாதானம் செய்ய கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது காதலியை பார்த்து, ‘ஏன் என்னிடம் பேசுவதில்லை,’ என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது, தாய் உடன் இருந்ததால், ‘அதுபற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். இப்போது இங்கிருந்து செல்,’ என்று கூறியுள்ளார். ஆனால், கார்த்திகேயன் அங்கிருந்து செல்லாமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சட்டக்கல்லூரி மாணவி, சாலையோரம் கிடந்த கட்டையை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் துரத்தி துரத்தி காத்திகேயனை தாக்கியுள்ளார். இதில் கார்த்திகேயனுக்கு காயம் ஏற்பட்டது.

பொதுமக்கள் சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் காயமடைந்த கார்த்திகேயனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இது எங்கள் காதல் விவகாரம், நான் புகார் அளிக்கவில்லை என கார்த்திகேயன் எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இருந்தாலும் பொது இடத்தில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை ஓட ஓட விரட்டி இளம்பெண் கட்டையால் தாக்கியதை சிலர் செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.