தொழிலாளர் ஆணையர் அலுவலகம் அண்ணாநகர் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
சென்னை, நவ.7: சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்-1 அலுவலகம் மற்றும் சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்-2 அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் புதிய அலுவலக கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த அலுவலகங்கள் ‘தொழிலாளர் ஆணையரகம், தொழிலாளர் அலுவலர் குடியிருப்பு வளாகம், பி-பிளாக், 6-வது நிழற்சாலை, அண்ணா நகர், சென்னை - 600 040’ என்ற புதிய முகவரியில் வரும் 10ம்தேதி முதல் செயல்பட உள்ளது. ஏற்கனவே, இந்த அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்காக வருகை புரிகின்ற வழக்கறிஞர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் புதிய அலுவலக வளாகத்தினை அணுகலாம்.
Advertisement
Advertisement