பராமரிப்பு பணிகள் காரணமாக 17 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, ஆக. 7: பராமரிப்பு பணிகள் காரணமாக 17 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40, 12.40 மணிக்கும், மூர்மார்க்கெட் - சூலூர்பேட்ைட இடையே காலை 10.15, 12.10, 1.05 மணிக்கும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 11.35, சூலூர்பேட்டை- நெல்லூர் இடையே மதியம் 3.50, மூர் மார்க்கெட்- ஆவடி இடையே இரவு 11.40 மணிக்கும், கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையே காலை 10.55, கும்மிடிப்பூண்டி- மூர்மார்க்கெட் இடையே மதியம் 1, 2.30, 3.15 மணிக்கும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே மதியம் 1.15, 3.10, இரவு 9 மணிக்கும், நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி- தாம்பரம் இடையே மாலை 3 மணிக்கு இயக்கப்படும் ரயில் கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.