எழும்பூர் உள்பட 3 கோட்டங்களுக்கு நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
சென்னை, நவ.6: எழும்பூர் உள்பட 3 கோட்டங்களுக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேப்பேரியில் உள்ள எழும்பூர் துணை மின் நிலையம், ஆவடி எஸ்.எம். நகரில் உள்ள துணை மின் வளாகம் மற்றும் பெரம்பூர் எம்.இ.எஸ். ரோடு, சிம்சன் எதிரில் உள்ள செம்பியம் துணை மின் நிலைய வளாகம் ஆகிய 3 கோட்டங்களுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் மின்சாரத்துறை சார்ந்த சந்தேகம் மற்றும் பிரச்னைகள் குறித்து தெரிவித்து அதற்கான விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement