தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்டலம் 4 மற்றும் 8க்கு கோரப்பட்ட தூய்மை பணிக்கான ஒப்பந்தம் ரத்து: மாநகராட்சி தகவல்

சென்னை, டிச.5: தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை சேவைகளை மேலும் வலுப்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் நிலையான சேவைகளை வழங்கும் வகையில், மண்டலம் 4 மற்றும் 8க்கு கோரப்பட்ட ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது, என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மைத்துறை மண்டலம் 4 மற்றும் 8ல் தூய்மை பணி மேற்கொள்ள உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டது. இதற்கு கடந்த 28ம் தேதி 4 ஒப்பங்கள் பெறப்பட்டன. மண்டலம் 4 மற்றும் 8ல் மக்கள் நெரிசல் மிகுந்தவை, குறுகிய தெருக்கள், பெரிய வணிக வளாகங்கள், உயர் அடுக்குமாடி குடியிருப்புகள், மயானங்கள், பூங்கா மற்றும் விளையாட்டு திடல்கள் அதிகம் கொண்ட பகுதி என்பதால், இங்கு வழங்கப்படும் தூய்மை சேவைகள் மிக உயர்ந்த தரத்தில் அமைய வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இதனால் முன்னதாக தயாரிக்கப்பட்ட டெண்டர் ஆவணம் தற்போது நிலவும் சேவை தேவைகளுக்கு முறையாக பொருந்தாமல் உள்ளது.

Advertisement

பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் கோரிக்கைகளுக்கு இணங்க கல்லறை பராமரிப்பு, பூங்கா பராமரிப்பு, விளையாட்டு மைதான பராமரிப்பு போன்ற முக்கிய சேவைகளையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவை நகர மக்களின் தினசரி வசதிகளுடன் நேரடியாக தொடர்புடைய அத்தியாவசிய சேவைகளாகும். இது பொதுமக்களுக்கு வழங்கப்படும் தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை சேவைகளின் தரத்தை மேம் உயர்த்தும். இந்த செயல்பாட்டு மாற்றங்களை ஒருங்கிணைத்து பார்க்கும் போது, தற்போதைய டெண்டரை ரத்து செய்து, மேம்படுத்தப்பட்ட பணிக்குறிகள், திருத்தப்பட்ட நிதி மதிப்பீடுகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கும் தரத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்ட சேவை கூறுகளுடன் புதிய டெண்டரை வெளியிடுவது மிக அவசியமாகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை சேவைகளை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் நிலையான சேவைகளை வழங்குவதற்காக மண்டலம் 4 மற்றும் 8க்கு கோரப்பட்ட ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement