மத்திய கூட்டுறவு வங்கியின் கண்காணிப்பு குழு கூட்டம்
காஞ்சிபுரம், மே 14: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 113வது மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு கூட்டம் வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வங்கியின் மேலாண்மை இயக்குநரும், கூடுதல் பதிவாளருமான ஆ.கி சிவமலர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கி மற்றும் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் வங்கி கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மண்டல இணைப்பதிவாளர்கள், சரக துணை பதிவாளர்கள், மேலாண்மை இயக்குநர், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குநர், இணை இயக்குநர், வேளாண்மை துறை, உதவி இயக்குநர், கைத்தறி துறை மற்றும் வங்கி முதன்மை வருவாய் அலுவலர், பொது மேலாளர், அனைத்து உதவிபொது மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.